இட்லி கடை, பராசக்தி படங்களின் தயாரிப்பாளர் வீட்டில் ரெய்டு
சினிமா
இட்லி கடை, பராசக்தி மற்றும் சிம்புவின் 49-வது படங்களின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஆகாஷ் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தனுஷ் நடிக்கும் இட்லிக்கடை படத்தை ஆகாஷ் தயாரித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தையும் ஆகாஷின் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது.
தயாரிப்பாளர் ஆகாஷ் துணை முதலமைச்சர் உதயநிதியின் நெருங்கிய நண்பர் என தகவல் வெளியாகி உள்ளது.
அண்மையில் நடந்த ஆகாஷ் பாஸ்கரன் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் பங்கேற்று இருந்தார்.






















