டூரிஸ்ட் ஃபேமிலி 1 நாளை விட 10-வது நாள் அதிக புக்கிங்ஸ் - குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி
சினிமா
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியாகி உள்ள படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. இப்படம் கடந்த 1-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படத்தில் மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி கலந்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். நேற்று சிவகார்த்திகேயன் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டினார். ரசிகர்களின் மத்தியில் வரவேற்பையும் பெற்று வசூல் குவித்து வருகிறது.
அந்த வகையில், 'டூரிஸ்ட் ஃபேமிலி' படம் வெளியானது முதல் 7 நாள் முடிவில் ரூ.27 கோடி வசூல் குவித்துள்ளதாக தகவல் வெளியானது. திரைப்படம் வெளியான முதல் வாரத்தை விட இந்த வாரம் அதிகம் புக்கிங் செய்யப்பட்டு வருகிறது. இன்று பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ் புல் ஷோக்களாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
திரைப்படம் வெளியான வாரத்தை விட நேற்று மிக அதிகளவில் டிக்கெட் புக் செய்யப்பட்டுள்ளது. படம் வெளியான் முதல் நாளில் 45 ஆயிரம் டிக்கெட் புக் செய்யப்பட்டது.. நேற்று மட்டும் 1லட்சத்து 23 ஆயிரம் டிக்கெட் புக் மை ஷோ செயலியில் மட்டும் புக் செய்யப்பட்டுள்ளது.
























