பேரன்புடன் மெய் - பிரேம்குமாருக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த சூர்யா
சினிமா
'96' படத்தை இயக்கிய பிரேம்குமார் நீண்ட இளைவெளிக்கு பிறகு 'மெய்யழகன்' படத்தை இயக்கியனார். இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டது.
அடுத்ததாக பிரேம்குமார் 96 பாகம் இரண்டு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் நடிகர் சூர்யா இயக்குநர் பிரேம் குமார்-க்கு ஒரு அழகிய காரை சர்பிரைஸ் பரிசாக வழங்கியுள்ளார். இதுக்குறித்து பிரேம் அவரது இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
அதில் " இந்த கார் எனது நீண்ட நாள் கனவு வண்டியாகும். எனக்கு குறிப்பாக தார் ராக்ஸ் 2AX 5L 4*4 மாடல் ஒயிட் கலர் தான் வாங்க வேண்டும் என நினைத்து இருந்தேன். ஆனால் எனக்கு அந்த மாடல் கிடைக்கவே இல்லை 1 வருடம் கழிந்தது. நான் இக்காரை பற்றி ராஜா சாரிடம் கூறியுள்ளேன். அதன் பிறகு அந்த காருக்காக சேர்த்து வைத்த பணத்தை செலவு செய்யும் சூழல் ஏற்ப்பட்டது. அதனால் என் கனவு வண்டி இன்னும் தள்ளி போனது. நான் இதைப்பற்றி ராஜா சாரிடம் கூறினேன் ஆனால் அப்போது அவர் அமைதியாக இருந்தார். ஆனால் எனக்கு அப்போது தெரியவில்லை இதற்கு பின்னாடி ஒரு பிளான் இருக்கிறது என.
நேற்று முந்தினம் சூர்யா அண்ணா இந்த காரின் புகைப்படத்தை அனுப்பினார்.இதை பார்த்தவுடன் நான் அதிர்ச்சியில் ராஜா சாருக்கு கால் செய்து என்னிடம் இதை வாங்க பணம் இல்லை என கூறினேன். அவர் சிரித்துக் கொண்டே இது சூர்யா சார் உனக்கு பரிசளித்துள்ளார். என கூறினார்." என அதில் மிகவும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார்.
நடிகர் கார்த்தி காரின் சாவியை பிரேம்க்கு தர அந்த காரில், பேரன்புடன் மெய் என கையெழுத்து பரிசை வழங்கினார்.























