விஜய் அண்ணாவ JD வைபில் பார்க்க ஆசை - மாஸ்டர் 2 அப்டேட் கொடுத்த லோகேஷ்
சினிமா
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிக்கின்றனர்.கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது.
சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் லோகேஷ் கனகராஜ் சில சுவாரசிய விஷயங்களை பகிர்ந்துள்ளார் அதில் அவர் "அனைத்து ரசிகர்களும் நான் லியோ 2 படத்தை இயக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். ஆனால் என்னோட ஆசை மாஸ்டர் 2 எடுக்க வேண்டும் என்பதே. மாஸ்டர் 2 திரைப்படத்திற்கு என்னிடம் ப்ராபரான ஐடியா இருக்கிறது அது அவருக்கும் தெரியும், விஜய் அண்ணாவை JD வைபில் பார்க்க வேண்டும் என்பது என் ஆசை" என கூறியுள்ளார்.






















