இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புதல் - பாகிஸ்தான் துணை பிரதமர் அறிவிப்பு
காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.
இதனையடுத்து இந்தியாவில் பல இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், இந்தியா -பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.
இதனையடுத்து இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக பாகிஸ்தான் துணை பிரதமர் இசாக் தார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "பாகிஸ்தானும் இந்தியாவும் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்டது. பாகிஸ்தான் எப்போதும் தனது இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டில் சமரசம் செய்யாமல், பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக பாடுபட்டு வருகிறது" என்று பதிவிட்டுள்ளார்























