கேரளாவின் அனைத்து Record-யும் முறியடித்த மோகன்லாலின் துடரும்
சினிமா
பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுடன் ஷோபனா `துடரும்' படத்தில் நடித்துள்ளார். மோகன்லாலுக்கு இது 360 - வது படம் ஆகும். ஷோபனா 20 வருடங்களுக்கு பிறகு மோகன்லாலுடன் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
துடரும் திரைப்படத்தை தருண் மூர்த்தி இயக்கியுள்ளார். படத்தை ரெஞ்சித் தயாரித்துள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் வெளியாகி 1 வாரத்தில் வசூலில் 100 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
இப்படம் திரிஷ்யம் திரைப்படத்தை போல் சஸ்பென்ஸ் திரில்லராக அமைந்துள்ளது. ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
படத்தின் ஓடிடி உரிமையை ஜியோ ஹாட்ஸ்டார் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திரைப்படம் மலையாளத்தில் வெற்றி பெற்றதை தொடர்ந்து படத்தை தமிழில் படக்குழு வெளியிட்டது.
இந்நிலையில் மலையாள சினிமாவில் இதுவரை அதிகம் வசூலித்த திரைப்படமாக துடரும் உருமாறியுள்ளது. இதற்கு முன் டொவினோ தாமஸ் நடித்த 2018 திரைப்படம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மோகன்லால் நடித்த எம்புரான் மற்றும் தொடரும் ஆகிய இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்து ஹிட்டடித்துள்ளதால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.























