• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சரோஜா போல்ராஜ் உடனடியாக பதவி விலக வேண்டும் - ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன தெரிவிப்பு

இலங்கை

சரோஜா போல்ராஜ் உடனடியாக அமைச்சு பதவியில் இருந்து விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன தெரிவித்துள்ளார்.

சரோஜா போல்ராஜ் சர்ச்சைக்குரிய மேலதிக வகுப்பு ஆசிரியரை பாதுகாக்கும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார் எனவும் எனவே அவர் இந்த அமைச்சுப் பதவியை வகிப்பதற்கு பொருத்தமற்றவர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தற்போது பேசுபொருளாகியுள்ள கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட பாடசாலை மாணவி தொடர்பில் பெண்ணாக, தாயாக, ஆசிரியராக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் சரோஜா போல்ராஜ் பொறுப்பின்றி செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார் .

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரான அவர் அமைச்சர் என்ற பொறுப்பிற்கும், அரசாங்கம் என்ற பொறுப்பிற்கும் அப்பால் செயற்பட்டுக் கொள்கின்றார் எனவும் துன்புறுத்தலுக்கு உள்ளான குறித்த மாணவி மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார் என அமைச்சர் குறிப்பிடுதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, குறித்த மாணவி உள ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார் என்பதற்காக இந்த சம்பவம் மூடி மறைக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் கூறுகின்றாரா? என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்புவதற்காக முயற்சித்த போது சபாநாயகர் உட்பட ஆளுங்கட்சியினர் எவரும் தனக்கு கருத்து தெரிவிப்பதற்கு வாய்ப்பளிக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
 

Leave a Reply