• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் திடீரென உயிரிழப்பு

இலங்கை

யாழ்ப்பாணத்தில் தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

அநுராதபுரம் பகுதியை சேர்ந்த முதியன்சலாகே அஜித்குமார ஜெயசுந்தர எனும் பொலிஸ் உத்தியோகஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தேர்தல் கடமைகளில் ஈடுபட்டிருந்த வேளை , திடீரென மயக்கமுற்ற நிலையில் , பருத்தித்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

உடற்கூற்று பரிசோதனையில் அவர் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்துள்ளார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.
 

Leave a Reply