• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முல்லைத்தீவில் சர்சைக்குரியவகையில் துண்டுப்பிரசுரங்களைவழங்கிய நபர் தொடர்பில் பரபரப்பு

இலங்கை

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறை பற்ற பிரதேச சபை தேர்தலுக்காக வீட்டு சின்னத்தில் தமிழரசு கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் துண்டுப்பிரசுரங்களை வழங்கிய சம்பவம் தொடர்பில் பொலிசார் வேட்பாளரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

முள்ளியவளை கிழக்கு பிரதேசத்தில் வேட்பாளர் பல வீடுகளுக்கு சென்று தமிழீல விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் படம் பொறிக்கப்பட்ட வீட்டு சின்னத்துக்கு புள்ளடி இடுமாறு துண்டு பிரசுரங்களை வழங்கி வந்துள்ளார்.

இந்த சம்பவம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்தை அடுத்து அப் பகுதியில் பொலிசார் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதுடன் இவ்வாறு துண்டு பிரசுரங்கள் பெற்றுக்கொண்ட மக்களிடம் வாக்குமூலம் பெற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதேவேளை குறித்த வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளரை வலைவீசி தேடு நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டு வருவதுடன் இதுவரை அவர் எந்தவித தொடர்புகள் அற்ற நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை வேட்பாளரின் இந்த செயற்பாட்டுக்கு ஏனைய கட்சிகளும் விசனம் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply