• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யோவ்.. அதுக்குள்ளையுமா..! யூடியூபரை நக்கலடித்த சசிகுமார்

சினிமா

சசிகுமார் அடுத்த படமாக டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது.

இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் ஷோக்களாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்த படத்தின் ஹீரோவாக நடித்த சசிகுமார் யூடியூப் திரைப்பட விமர்சகர் பிரசாந்த்-ன் சேனலுக்கு இன்டர்வியூவ் கொடுத்தார்.

டூரிஸ்ட் பேமிலி படத்தின் ரிலீஸ் குறித்து இருவருக்கிடையே உரையாடல் இருந்தது. பின்னர், இன்டர்வியூவ் முடிந்த பிறகு, சசிகுமார் உடன் பிரசாந்த் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

புகைப்படம் எடுத்த சில நிமிடங்களிலேயே, பிரசாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில்" அண்ணன் சசிகுமாருடன் ஓர் அழகான உரையாடல்" என்று குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், இந்த பதிவை பார்த்த சசிகுமார், " யோவ்.. இப்ப தானயா இந்த போட்டா எடுத்திங்க அதுக்குள்ளையுமா..." என்று நக்கலாக பதிவிட்டு, பிரசாந்தின் பதிவையும் உடன் ஷேர் செய்திருந்தார்.

இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
 

Leave a Reply