
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி அறிவுச்சோலைக்கு வெள்ளிவிழா
இலங்கை
நாட்டின் நிலையான அபிவிருத்தியின் முதன்மைக் காரணியாகவும், வலுவூட்டும் சக்தியாகவும் விளங்கும் கல்வி முறையின் நெறியாழ்கைக்கு ஆசிரியர்களே பொறுப்பாகின்றனர். கல்வித் தொகுதியின் வெளியடுP ஆசிரியத்துவத்தினால் புலப்படுத்தப்படும். இவ்வகையில் ஆசிரியர்களுக்கு வழங்கும் தொழிற்பயிற்சி தரமானதாக இருக்க வேணடு;ம் என்பதற்கமைய இலங்கையில் 1986 ஆம் ஆண்டு 30 ஆம் இலக்க கல்வியியற் கல்லூரியின் சட்டம் மூலம் கல்வியியற் கல்லூரிகள் உருவாக்கப்பட்டன. அந்த வகையில் யாழ்ப்பாணம் கோப்பாய் புனித மண்ணிலே யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி 2000-05-02ம் திகதி தோற்றம் பெற்றது. கடுமையான யுத்த காலத்தில் பல வளப்பற்றாக்குறைகளுக்கு மத்தியில் இக் கல்லூரி உருவானது. இதற்கு தன் முயற்சியால் அர்ப்பண சேவையாற்றியவர் முதற் பீடாதிபதி கலாநிதி.தி.கமலநாகன் ஆவார். கல்லூரியின் தொடக்கம், நகர்வு, விரிவு, விளைவு என்ற வகையில் தன் தலமைத்துவத்தை சிறப்பாக மனிதவளம் சார்பாகப் பிரயோகித்து வெற்றி கண்டர். இது ஆசிரிய வகிபாகத்திற்கு சாதனையை ஏற்படுத்தும் திறனாகும்.
நிதி மற்றும் பௌதீக வளங்களுடன் ஒப்பிடுகையில் மனிதவளம் மிகவும் உயர்வானது. முக்கியமானது.
ஏனைய வளங்கள் தொடர்பாக தீர்மானம் எடுக்க கூடிய வளம்
புத்தாகக்ங்களையும் கண்டுப்பிடிப்புகளையும் செய்யக் கூடிய வளம்
தடைகள், செலவுகள் மீது செல்வாககு; செலுத்தக்கூடிய வளம்
நேரத்தின் பெறுமதி தெரிந்த வளம்
ஒழுங்குபடுத்தி வேலைகளை இலகுவாக்கும் வளம்
வேறுபட்ட ஆளுமைகள் கற்கக்கூடிய நடத்தை மாறக்கூடிய, சாதனைகளைச் செய்யும் வளம்
இம் மனிதவளத்தை கல்வியாளர்கள், கல்விசாரா ஊழியர்கள்,
முணவர்கள்,ஆசிரியர்கள், நலன் விரும்பிகள், சமூகத்தை முதலாவது பீடாதிபதி கலாநிதி.தி.கமலநாதன் சிறப்பாக பயன்படுத்தினார். அதற்கு சிரேஸ்ட ஆலோசனை சபை உறுப்பினர், வைத்திய கலாநிதி டாக்டர்.வை.தியாகராஜா துணையாக இருந்து அர்ப்பண சேவையாற்றினார். இன்றும் ஆற்றி வருகின்றார்.
நிலக்கொடை :
கல்வியமைச்சு கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் ஒரு பகுதியில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியை ஆரம்பித்தது. அதன் புதிய கட்டத்திற்கான பதினைந்து ஏக்கர் காணியை கோப்பாயில் நன்கொடையாய் தனது தந்தையார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஏ. தர்மலிங்கம் அவரின் பெயரில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் வழங்கினார். இந் நிலக்கொடை என்பது மிக மிக உயர்வான தியாகமும் அரப் பணிப்புமாகும்.
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற்கல்லூரி உலக வங்கி நிதிப்பங்களிப்பில் கல்வியமைச்சின் வழிகாட்டலில் மிகச்சிறப்பாக அன்று இயங்க பலர் உதவினார்கள். பிரதம ஆணையாளர் நிகால் கேரத், கோப்பாய் புனரமைப்பு கழகம,; அன்றைய மீள் குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவனாந்தா கட்டடம் கட்ட அருளாசி வழங்கிய அருட்கவி. வினாசித்தம்பி ஐயா, மணல் மற்றும் பௌதீக வளங்களைக் கொண்டு வருவதிலுள்ள தடைகளை நீக்கிய கல்விக்கழக கௌரவ பேபி. சுப்பிரமணியம் அவர்கள் வித்தக விநாயகர் ஆலயத்தைக் கடடி;த்தந்த செஞ்சொற்செல்வர். ஆறு.திருமுருகன் அவர்கள், கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபர் மு.பரஞ்சோதி அவர்கள், அன்றைய தென்னிந்தியத் திருச்சபை ஆயர் அருட்தந்தை ஜெபநேசன் அவர்கள் என இன்னும் பலர் பல உதவிகளை வழங்கினர். அவர்கள் தெய்வங்களாக இன்னும் போற்றப்படுகினறார்கள்.
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் பயன்கள்
1.மாணவர்களுக்கு ஆசிரிய தொழில் வாய்ப்பு பெருமளவு கிடைக்கின்றது.
2.யாழ் மாவட்ட பாடசாலைகளில் கற்பித்தல் உள்ளகப் பயிற்சியின் போது நவீன கற்பித்தல் முறைகள், செயற்திட்டங்கள், பரிகாரக் கற்பித்தல்கள் செயல் நிலை ஆய்வுகள் சிறந்த முறையில் பிரயோகிக்கப்படுகின்றன.
3.பாடசாலையை புரிதல் செயற்திட்டம், செயல்நிலை ஆய்வு மாநாடுகள், பாடசாலையும் சமூகமும் செயற்திட்டம் அதிக கஸ்ட பிரதேச மாணவர்களுக்கான க.பொ.த சாதாரண தர கணித, விஞ்ஞான பாடங்களுக்கான களப்பயில்வுகள், மரம் நாட்டும் செயற்திட்டம், தொடருறுகல்வி, ஆசிரியர் மத்திய நிலையங்களுடன் இணைந்து வழங்குகினற் மை.
4. கல்வியமைச்சு, தேசிய கல்வி நிர்வாகத்துடன் இணைந்த கல்வி செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், புத்தாக்கங்கள், நூல்கள், சஞ்சிகைகள் உருவாக்கம்
இவ்வாறு மிகப் பெரும் கல்விசார் தாகக் விளைவை வரையறுக்கப்பட்ட வளங்களுடன் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி சாதித்துள்ளது. இங்கு கற்றவர்கள் சிறந்த ஆசிரியர்ளாக, அதிபர்களாக, கல்விப்பணிப்பாளர்களாக கல்வியலாளர்களாக சிறந்த கல்விச் சேவையாற்றி வருகினற்னர. இவ்வகையில் 2 ஆவது பீடாதிபதியாக திரு.ளு.மு யோகநாதன் அவர்கள் 2006 ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் மாணவ ஆசிரியர்களைக் கொண்டு கல்விசார், பௌதீகவள செயற்திட்டங்களை வெற்றிகரமாக செயற்படுத்தினார். இயற்கை நேசனான இவர் பெருமளவு தென்னங்கன்றுகளை கல்லூரியில் நாட்டினார். இன்று அதன் பயன் பெருமளவு கிடைக்கின்றது. மிகவும் ஆழமாக அவதானிக்கும் திறன் இவரது ஆற்றலாகும். இது ஆசிரிய வாண்மைக்கு அவசியமானதாகும். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் அவர்களின் சிலை இவரது காலத்திலேயே கல்லூரியில் நிறுவப்பட்டது.
யாழ்ப்பாணம் தேசிய கல்வியிற் கல்லூரி
மாணவ ஆசிரியர்கள் கடுமையான ஒழுக்கவிதிகளின் கீழ் பயிற்றுவிக்கப்படுவார்கள். எங்கு ஒழுக்கம், விழுமியங்கள், வகை கூறல்கள் சரியாக உளள்தோ அங்கே கல்வி மலரும் எனும் கோட்பாட்டுடன் கல்லூரியின் மூன்றாவது பீடாதிபதி திரு. ச.அமிர்தலிங்கம் அவர்கள் 2013ம் ஆண்டு கல்லூரியைப் பொறுப்பேற்றார். கடுமையான நிர்வாகம் ஆனாலும் மாணவ, ஆசிரியர்கள் இவரை விரும்புவர். தூய்மையான அன்புள்ளம் கொண்டவர். இதுவும் ஆசியவாண்மையில் உயர் பண்பாகும்.
நவீன ஆசிரியத்துவ பிரதிபலிப்புக்கள், பிரச்சினைகள்
இன்றை மாணவர்கள் பல குடும்ப, சமூக, தொடர்பு சாதன, போதைப்பொருள், கட்டிளமைப்பருவ பிரச்சினைகளுடன் கல்வி கற்க பாடசாலை வருகின்றார்கள். அவர்களை முந்தைய ஆசிரியர்கள் கையாள்வதைப்போல கையாள முடியாது. மிகுந்த மனிதத்துவம், தந்திரோபாயம், வழிகாட்டல் ஆலோசனைப் தேர்ச்சிகள், புரிந்துணர்வு, மென் திறன்களை கற்பிப்பதற்கான சமூகத்திறன்கள், கடுமையான பயிற்சிகள் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் வழங்கப்படுகின்றது.
2019 ம் ஆண்டு கலாநிதி. சு. பரமானந்தம் அவர்கள் நான்காவது பீடாதிபதியாக பதவியேற்கின்றார். தொடர்ந்து கொவிட் வைரஸ் காலம் கல்லூரி மருத்துவ நிலையமாக்கப்பட்டு விடுவிக்கப்பட்டது. பல சவால்கள், பிரச்சினைகளுக்கு மத்தியில் பீடாதிபதி கலாநிதி சு. பரமானந்தம் அவர்கள் தனது சமூகத்திறன்களால் சவால்களை சாதனையாக்குவார். கொவிட் காலத்தில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முன் மாதிரியான கலைத்திட்டத்தை தேசிய கல்வியியல் கல்லூரியில் சிறப்பாக நடைமுறைப்படுத்திக் காட்டினார்.
கல்வி அமைச்சு ஏனைய தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கும் முன்மாதிரியை பின்பற்றி இக் கலைத்திட்டத்தை நகர்த்தியமை சிறப்பான முன்மாதிரியாகும். இது ஆசிரியவாண்மைக்கு ஒரு முன்னுதாரணமாகும். இலங்கையிலே அதிகமான பாடநெறிகளை யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரி கொண்டுள்ளது. ஆரம்பக் கல்வி, விசேட கல்வி, உடற்கல்வி, விஞ்ஞானம், கணிதம், சங்கீதம், நடனம், சித்திரம் ஆகியவற்றை தமிழ் மொழி மூலமூம், கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகியவை ஆங்கில மொழி மூலமும் பயில்வுகள் சிறப்பாக நடைபெறுகினறன தமிழ், முஸ்லீம், சிங்கள மாணவ ஆசிரியர்கள் மகிழ்வாக கற்கின்றனர்.
இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு திரு.தி.ஜெயகாண்டீபன் அவர்கள் பீடாபதிபதி ஆனார். அவர் நவீன ஆசிரியர் தொழில்சார் தேர்ச்சிகளிலும், ஆசிரியத்துவ பிரதிபலித்தல், செயல் நிலை ஆய்வுத் துறைகளில் நிபுணத்துவ ஆற்றல் கொண்டு மாணவ ஆசிரியர்களைச் சிறப்பாக வழிப்படுத்தினார். சிறந்த கற்பித்தலுக்கான உறுதியான ஆளுமையும், ஆற்றலும் கொண்ட முன்மாதிரியான கற்பித்தல் கலைஞராகத் தொழிற்பட்டார். இது இன்றைய ஆசிரியர்களுக்கு அவசியமான தேர்ச்சியாகும்.
கடந்த இருபத்தைந்து வருடங்கள் வரையறுக்கப்பட்ட வளங்களுடன் சிறப்பாக இயங்கிய கல்லூரியின் கட்டடங்கள் கட்டி இருபத்தைந்து வருடங்கள், பல திருத்த வேலைகள், மின்சாரம், நீர் இணைப்புக்கள் முற்றாக மறுசரீமைக்க வேணடும், விடுதிகள் விஸ்தரிக்கப்பட வேணடும். கலைதிட்ட அமுலாக்கம் மேலும் இற்றைப்படுத்தபட வேணடும். மனித வள வலுவூட்டல,; ஒருங்கிசைவு உறுதிப்படுத்த பயிற்சிகள், மனப்பாங்குகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேணடும். பாடசாலைகளுடன் மேலும் உயிர்ப்பான தொடர் பாடல்களை மேற்கொண்டு நுண்முறைக் கற்பித்தல், மாதிரிக்கற்பித்தல், களப்பயணங்கள், சர்வதேசஆசிரிய வாண்மைப் பயில்வுகளுக்கு இணையான செயற்திட்டங்கள் தேவையாகவுள்ளன. இதன் வளர்ச்சியாக ஒரு ஆசிரிய தொழில்துறைப் பல்கலைக்கழகமாக உரிய கட்டுப்பாடுகளுடன் கல்லூரி உருவாக்கப்பட வேணடும்.
இவ்வகையில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி வெள்ளிவிழா ஆண்டுப் பீடாதிபதியாக திரு.இரா.லோகேஸ்வரன் அவர்கள் பொறுப்பேற்றுள்ளார். மாணவ ஆசிரியர்கள் சார்பாக நிறைந்த கரிசனையுடன் வாடிக்கையாளர் திருப்தி மூலம் மனிதவள மேம்பாட்டை ஏற்படுத்த முடியும் என்ற வகையில் பல முகாமைத்துவ தேவை திருப்தி அணுகுமுறைகளைப் பிரயோகித்து செயலாற்றுகைகளை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றார். கல்வியமைச்சரும், பிரதமருமான கௌரவ ஹரிணி அமரசிங்க கல்லூரிக்கு விஜயம் செய்ததுடன் பாராளுமன்றத்திலும் கல்லூரியில் பல தேவைகள் உண்டு அவற்றைத் தீர்த்து வைப்போம் எனவும் உரையாற்றியுள்ளார். யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி தொடர்ந்தும் சிறப்பான வளர்ச்சியடையும். கடந்த இருபத்தைந்து வருடங்கள் உழைத்த அனைவருக்கும் இறையருள் கை கூடுவதாக.