
தெதுரு ஓயாவில் நீராடிய இருவர் மாயம்
இலங்கை
தெதுரு ஓயாவில் நேற்று (01) மாலை நீடிராடிக் கொண்டிருந்த ஐந்து பேர் பலத்த நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், அவர்களில் மூவர் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும், காணாமல் பேன நபர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
காணாமல் போனவர்கள் 20 மற்றும் 22 வயதுடையவர்கள், கண்டியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியின் ஊழியர்கள்.
மீட்கப்பட்ட மூன்று பெண்களும் அதே நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நேற்று (02) பல்பொருள் அங்காடி மூடப்பட்டிருந்ததால், உரிமையாளரும் ஊழியர்களும் சுற்றுலா சென்றிருந்ததாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவர்கள் முதலில் சிலாபம் கடற்கரைக்குச் சென்று பின்னர் தெதுரு ஓயாவில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீராடியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.