• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சட்டவிரோத கடத்தல் முறியடிப்பு - விமான நிலையத்தில் பெண்ணொருவர் கைது

இலங்கை

சுங்க வரி செலுத்தாமல் தங்கப் பொருட்கள், மடிக்கணினிகள் மற்றும் மொபைல் போன்களை நாட்டிற்குள் கடத்த முயன்றதற்காக 63 வயதுடைய பெண் ஒருவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மே 1 ஆம் திகதி விமான நிலைய பொலிஸ் நிலைய அதிகாரிகளால் இரகசிய தகவலுக்கு அமைவாக இவர் கைது செய்யப்பட்டள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் 23 தங்க நகைகள், ஒரு தங்கத் துண்டு, 3 வளையல்கள், 6 மடிக்கணினிகள் மற்றும் 11 மொபைல் போன்கள் அடங்கும்.

கைதான நபர் மத்தேகொட பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

சம்பவம் தொடர்பில் விமான நிலைய பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Leave a Reply