• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாளை ஒரே நாளில் வெளியாகும் 4 படங்கள்- நடிகர் சூர்யா வாழ்த்து

சினிமா

2டி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள புதிய படம், 'ரெட்ரோ'. சூர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கிறார். நாசர், ஜெயராம், கருணாகரன், பிரகாஷ்ராஜ், ஜோஜூ ஜார்ஜ், சுஜித் சங்கர், சுவாஷிகா, சிங்கம்புலி உள்பட பலர் நடித்துள்ளனர். நாளை முதல் உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது.

இப்படத்துடன் நாளை ஒரே நாளில், சசி குமார்- சிம்ரன் நடிப்பில் 'டூரிஸ்ட் ஃபேமிலி' வெளியாக உள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. 'சூர்யாவின் சனிக்கிழமை' படத்தை தொடர்ந்து நானி, 'ஹிட் தி தேர்ட் கேஸ்' படத்தில் நடித்துள்ளார். இந்த படமும் நாளை வெளியாகிறது.

மேலும், ரெய்ட்-2 படமும் நாளை வெளியாகிறது. நாளை (மே 01) ஒரே நாளில் 4 புதிய திரைப்படங்கள் வெளியாகவுள்ள நிலையில், நடிகர் சூர்யா தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

சசி மற்றும் சிம்ரன், நானி, அஜய் ஆகியோரின் டூரிஸ்ட் ஃபேமிலி, ஹிட் 3, ரெய்ட்-2 ஆகிய படங்களுக்கு வாழ்த்துகள். அனைவரின் படங்களும் வெற்றி பெற்று, பார்வையாளர்களை மகிழ்விக்கட்டும்.

'ரெட்ரோ'-விற்கு ஆதரவளிக்கும் அன்பான ரசிகர்கள் அனைவருக்கும் எனது அன்பும், மரியாதையும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply