• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அக்கரப்பத்தனையில் பொது மக்கள் போராட்டம்

இலங்கை

அக்கரப்பத்தனையிலிருந்து டயகம வரையிலான மூன்று கிலோமீற்றர் தூரம் கொண்ட வீதியினை கார்பட் வீதியாக  புனரமைத்துத் அமைத்துத் தருமாறு கோரி  அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பகுதியைப் பயன்படுத்தி வரும்  தனியார் பேருந்து உரிமையாளர்கள், சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த மக்களே இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது டயகம அரசு கால்நடை பண்ணை மற்றும் டயகம பிராந்திய மருத்துவமனை உட்பட ஒன்பது தேயிலைத் தோட்டங்களைச் சேர்ந்த சுமார் நாற்பத்து மூவாயிரம் மக்கள் இப் பகுதியில் வசித்து வருவதாகவும்,இவ் வீதி  குன்றும் குழியுமாகக் காட்சியளிப்பதால் போக்குவரத்தை மேற்கொள்வது மிகுந்த சிரமமாகக் காணப்படுவதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
 

Leave a Reply