• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில். மின்னல் காரணமாக 19 பேர் பாதிப்பு – 4 வீடுகள் சேதம்

இலங்கை

யாழ்ப்பாணத்தில் கடந்த இரு தினங்களாக ஏற்பட்டுள்ள கால நிலை மாற்றத்தினால்  ஏற்பட்ட மின்னல் காரணமாக 6 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் 4 வீடுகளும் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் உடுவில் பகுதியில்  இரு குடும்பத்தை சேர்ந்த ஏழு பேரும், கோப்பாய் பகுதியில் 1 குடும்பத்தை சேர்ந்த 5 பேரும், சாவகச்சேரி பகுதியில் 2 குடும்பங்களை சேர்ந்த 3 பேரும்,  மருதங்கேணி  பகுதியில்  1 குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் என 19 பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply