மேடையில் Propose செய்த டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் - கண் கலங்கிய காதலி
சினிமா
சசிகுமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த நந்தன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து சசிகுமார் அடுத்த படமாக டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் மே 1 ஆம் தேதி வெளியாகிறது.
அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்கிறார். பாடலாசிரியர் மோகன் ராஜன் பாடல்களை எழுத, ஆடை வடிவமைப்பு பணிகளை நவா ராஜ்குமார் கையாள்கிறார்.
ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகியுள்ள இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நசரேத் பசலியான், மகேஷ் ராஜ் பசலியான், யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நேற்று நடைப்பெற்றது.
அதில் இயக்குனர் அபிஷான் ஜீவின்ந்த் பேசியதாவது " டூரிஸ்ட் ஃபேமில்ய் ஒரு குடும்ப திரைப்படம். எல்லாரும் சந்தோஷமா குடும்பமா பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம். என்னுடைய அம்மா மற்றும் அப்பாவிற்கு நன்றியை கூறிகொள்கிறேன். படத்தில் நடித்த அனைவருக்கும் மற்றும் படக்குழு ஆட்கள், ஷான் ரோல்டன், சசிகுமார், சிம்ரன் ஆகியோருக்கு நன்றி"
பின் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கடைசியாக அவர் கூறிய வார்த்தை நிகழ்ச்சியின் ஹைலைட்டாக அமைந்தது. கடைசியாக அவரது தோழி மற்றும் காதலியான அகிலா இளங்கோவனை பற்றி கூறினார் அப்போது ' உன்னைய எனக்கு 6th-ல இருந்து தெரியும். 10 த் படிக்கும் போதுலருந்து க்ளோஸா இருக்கோம். இந்த இடத்துல உன்கிட்ட ஒரே ஒரு விஷயம் தான் கேட்கனும் வர அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி என்ன கல்யாணம் பண்ணிக்கிறியான்னு மட்டும் நான் கேட்டுகிறேன். ஐ லவ் யூ சோ மச். " என மிக அழகாக அவரது காதலிக்கு இயக்குநட் ப்ரோப்போஸ் செய்தார். இந்த காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.























