நாக சைதன்யாவின் 24ஆவது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது..
சினிமா
தெலுங்கு பட உலகின் முன்னணி நடிகரான நாக சைதன்யா சமீபத்தில் நடித்து வெளியான படம் தண்டேல். இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார். 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது.
தண்டேல் படத்தை தொடர்ந்து புஷ்பா பட இயக்குனர் சுகுமார் கதை எழுத, பிரபல இயக்குனரான கார்த்திக் தண்டு இயக்கும் படத்தில் நடிக்கிறார். இது நாக சைதன்யாவின் 24ஆவது படம் ஆகும். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. படப்பிடிப்பு தொடங்கியதற்கான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
இப்படத்தை எஸ்விசிசி நிறுவனம் தயாரிக்கிறது. இது ஒரு த்ரில்லர் புராணக் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீடியோவில், தீப்பந்தத்துடன் நாக சைதான்யா குகைக்குள் சென்று ஒரு கல்லில் பொறிக்கப்பட்ட எழுத்தை பார்க்கிறார். அதில் அகழ்வாராய்ச்சி தொடங்கியது (The Excavation Begins) என எழுதப்பட்டுள்ளது.
























