பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்திய பெண் தற்கொலை
பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் அமெரிக்க தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்து பரபரப்பை வர்ஜீனியா கியூஃப்ரே உயிரிழந்தார்.
41 வயதான வர்ஜீனியா ஆஸ்திரேலியாவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டு இறந்து கிடந்தார். வர்ஜீனியா தற்கொலை செய்து கொண்டதை குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.
அமெரிக்க கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் மற்றும் பிரிட்டன் ராணி எலிசபெத்தின் இரண்டாவது மகனும் இளவரசருமான ஆண்ட்ரூவும் மீதான வர்ஜீனியாவின் குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தன்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகவும், பாலியல் அடிமையாகப் பயன்படுத்தியதாகவும், இளவரசர் ஆண்ட்ரூவும் 17 வயதில் தன்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகவும் வர்ஜீனியா குற்றம்சாட்டினார்.
இளவரசர் ஆண்ட்ரூவுடன் உடலுறவு கொள்ள ஜெஃப்ரி எப்ஸ்டீன் தனக்கு 15,000 டாலர் கொடுத்ததாக கியூஃப்ரே வெளிப்படுத்திய ஆதாரங்கள் அடங்கிய நீதிமன்ற ஆவணங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. மேலும் பல சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் மீது சுமத்தப்பட்டன.
இந்த வழக்கில் 2008 இல் தண்டனை பெற்ற ஜெஃப்ரி எப்ஸ்டீன், 2019 இல் நியூயார்க் நகர சிறையில் தற்கொலை செய்து கொண்டார். பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை தொடர்ந்து தொடர்ந்து ஆண்ட்ரூ தனது அரச பட்டங்களை இழந்தார்.























