விருமாண்டி காட்சியின் ஈர்ப்பால் ஹாய் நான்னா திரைப்படத்தில் நடித்தேன் - நானி
சினிமா
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் 'சூர்யாவின் சனிக்கிழமை' படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து 'ஹிட் 3 படத்தில் நானி நடித்துள்ளார். ஹிட் 3 படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார்.
பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் மே மாதம் 1 ஆம் தேதி திரைக்கு வருகிறது. ரத்தம் தெறிக்கும் கிரிமினல் ஜானரில் உருவாகியுள்ள ஹிட் 3 படத்தில் நானி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த நேர்காணலில் நானி சில சுவாரசிய விஷயங்களை பகிர்ந்தார் " நான் கமல் சாரிடம் கேள்வி கேட்க வேண்டுமென்றால். விருமாண்டி திரைப்படத்தில் அந்த கோர்ட் சீனின் போது அவர் தூங்கி கொண்டு இருப்பார். அவரை தட்டி எழுப்புவார்கள் அப்பொழுது அவர் உண்மையில் தூங்கி எழுபவர் எப்படி செய்வார்களோ அதே முக பாவனைகளை செய்வார். நான் அந்த வீடியோ கிளிப்பை ஒரு 100 தடவை மேல் பார்த்திருப்பேன். அதை இன்ஸ்பைர் செய்து தான் ஹாய் நான்னா திரைப்படத்தில் ஒரு காட்சி நடித்தேன். அவர் யாரிடம் இருந்து இன்ஸ்பையர் ஆகுகிறார் என ஆவல் அதிகம் இருக்கிறது" என கூறியுள்ளார்.























