• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறிய கலிபோர்னியாவின் பொருளாதாரம்

கனடா

உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக கலிபோர்னியாவின் பொருளாதாரம் மாறியுள்ளது

கலிபோர்னியாவின்  பொருளாதாரம் ஜப்பானின் பொருளாதாரத்தையும் விஞ்சியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த விடயம் கணிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் கலிபோர்னியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.10 டிரில்லியன் அமெரிக்க டொலரை விட அதிகமாகப் பதிவாகியுள்ளது.

மூலப்பொருள் உற்பத்தி மற்றும் விவசாய உற்பத்தியில் கலிபோர்னியா மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளது. இந்நிலையில் கலிபோர்னியாவின் பொருளாதாரத்தின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய ட்ரம்ப் நிர்வாகத்தின் வரிக் கொள்கைகளால் இந்த முன்னேற்றம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகப் பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 

Leave a Reply