சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் குடும்பத்துடன் தல அஜித்
சினிமா
ஐ.பி.எல். தொடரின் 43ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். சி.எஸ்.கே அணி அதிரடியான விளையாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று சென்னையில் நடக்கும் இந்த போட்டியை நடிகர் மற்றும் ரேசரான அஜித் குமார் அவருடைய மனைவி ஷாலினி மற்றும் அவரது மகன் ஆத்விக் மகள் - அனுஷ்கா உடன் நேரில்கண்டுகளித்து வந்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சேப்பாக்கம் மைதானத்தில் இரு தல-யையும் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்துடனும் ஆரவாரத்துடனும் பார்த்து வருகின்றனர்.























