ஜெயிலர் 2 - ரஜினியை ஆரவாரத்துடன் Send Off செய்த ரசிகர்கள்
சினிமா
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் "ஜெயிலர்." இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், வசூலிலும் பல கோடிகளை குவித்தது. இந்த நிலையில், ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக படக்குழு சமீபத்தில் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு அறிவித்தனர்.
முதற்கட்ட படப்பிடிப்பு கோவை மற்றும் அட்டபாடி அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைப்பெற்று வந்தது. இன்றுடன் அப்பகுதி படப்பிட்ப்பு பணிகள் முடிவடைந்தது.
படப்பிடிப்பு முடிந்த பிறகு நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்ப கோயம்பத்தூர் விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு ரசிகர்கள் அவரை கோலாக்கலமாக வழிஅனுப்பி வைத்தனர். அந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
படத்தின் இசையை அனிருத் மேற்கொள்கிறார் மற்றும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.






















