• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டேய் எனக்கு கூடவா இல்லைனு சொல்லுவே ...

சினிமா

வைதேகி காத்திருந்தாள் பட பாடல்கள் ஏற்கனவே கம்போஸ் செய்யப்பட்டு பின் படக்கதை உருவாக்கி பயன்படுத்த பட்டவை என்பது அறிந்த தகவலாக இருந்தாலும் அறியாத ஒரு விசயமாக அந்த பாடல்கள் கம்போஸ் செய்த பின்னணியை இசைஞானி கூறியது ஆச்சர்யமாக இருந்தது.

“காக்கிசட்டை படத்திற்காக முதுமலை காட்டு பகுதிக்கு மூன்று நாள் கம்போசிங்காக போயிருந்தோம். முதல் நாள் காலை ஆரம்பித்து மதியம் சாப்பாட்டுக்குள் எல்லா பாடலும் கம்போசிங் முடிஞ்சிருச்சு. சரி ஈவ்னிங் ஹார்மோனியத்தோட உட்காருவோம்னு உட்கார்ந்தா டியூன் வந்துகிட்டே இருக்கு. டேப் ரிக்கார்டில அந்த டியூனை ரெக்கார்ட் பண்ணிகிட்டே இருந்தேன். 6 பாட்டு வந்துருச்சு. அந்த பாடல்களின் டியூனை கேட்டு பஞ்சு அருணாசலம் சார் அதில் வரும் “ஆஹா ஓஹோ ஏஹேஹே” பாடலை மட்டும் தன் படத்திற்காக கேட்டார். அந்த படத்தில் 6 பாடலும் வேண்டும் என்றால் கொடுக்கிறேன். ஒரு பாட்டு என்றால் கிடையாது அண்ணா என சொல்லிவிட்டேன்.

டேய் எனக்கு கூடவா இல்லைனு சொல்லுவே என்று கேட்க “உங்களுக்கும் தான். அது அப்படி தான் அண்ணா” என்று சொல்லி விட்டேன்.

வைதேகி காத்திருந்தாள் படத்தில் வரும் பாடல்களில் “ஆஹா ஓஹோ ஏஹேஹே” என்று தொடங்கும் மேகம் கருக்கையிலே புள்ள தேகம் குளிருதடி பாடலை மட்டும் எழுதியவர் பஞ்சு அருணாசலம் என்பது குறிப்பிடதக்கது.

இதில் உச்சகட்ட சுவாரஸ்யமான தகவலாக மணி ஷாரை இசைஞானிக்கு அறிமுகப் படுத்தியவர் கேமரா கவிஞர் பாலு மகேந்திரா என்பதை இசைஞானியின் பேட்டியில் அறிந்து கொள்ள முடிந்தது.

இசைஞானி 

Leave a Reply