• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வைத்திய அதிகாரிகளின் இடமாற்ற விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலம் நீடிப்பு

இலங்கை

தரவரிசைப்படுத்தப்பட்ட வைத்தியர்களின் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அந்த விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பின் படி, அனைத்து விண்ணப்பங்களும் ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ள அனைத்து மருத்துவ அதிகாரிகளும் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி 2025/03/24 வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களை சுகாதார அமைச்சின் https://hrmis.health.gov.lk/ms/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Leave a Reply