• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நக்கல் புடிச்சவன் - பிடி சார் படத்தின் அடுத்த பாடல் வெளியானது

சினிமா

2015 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். அதைத்தொடர்ந்து இன்று நேற்று நாளை, தனி ஒருவன், அரண்மனை 2, கதகளி, கவண், இமைக்கா நொடிகள் போன்ற பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இசையமைப்பது மட்டுமல்லாமல் தன்னுடைய முதல் படமான மீசைய முறுக்கு படத்தை அவரே எழுதி, இயக்கி நடித்தும் இருந்தார். இப்படம் மக்களிடையெ மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

அதைத்தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு மற்றும் வீரன் படத்தில் நடித்தார். தற்பொழுது வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்னேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் பிடி சார் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கார்த்திக் வேனுகோபாலன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் விளையாட்டு ஆசிரியர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

காஷ்மிரா, அனிகா சுரேந்திரன், பாண்டியராஜன், தியாகராஜன், முனிஸ்காந்த் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். மாதேஷ் மாணிக்கம் இப்படத்திற்கு ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். படத்தின் பாடலான குட்டி பிசாசே வீடியோ யூடியூபில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் . படத்ஹின் அடுத்த பாடலான நக்கல் புடிச்சவன் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

இத்திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.

Leave a Reply