• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜனாதிபதியின் வடக்கு விஜயம் - தவறாகத் தமிழில் எழுதப்பட்டுள்ள பெயர்ப்பலகை

இலங்கை

வட மாகாணத்தில் விசேடமாக அமைக்கப்பட்டிருக்கின்ற மருத்துவப் புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் உளநல மேம்பாட்டு நிலையம் மாங்குளம் ஆதரவைத்தியசாலை வளாகத்தை அண்டிய பகுதியிலே அமைக்கப்பட்டு தற்போது திறந்து வைக்கப்பட இருக்கின்றது.

எதிர்வரும் 26 ஆம் திகதி நாட்டினுடைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வருகை தந்து இந்த வைத்தியசாலையை திறந்து வைக்க இருக்கின்ற நிலைமையில் வைத்தியசாலை முன்பாக அமைக்கப்பட்டிருக்கின்ற பெயர் பலகையில் மாங்குளம் என்பது தமிழ் மொழியில் தவறாக எழுதப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மாற்றுமாறு பல தடவைகள் உரியவர்களுக்கு தெரியப்படுத்தியும் இன்றுவரை அது மாற்றப்படவில்லை எனவும் எனவே திறப்பு விழாக்கு முன்னதாக தமிழ் மொழியினை சரி செய்து பெயர்ப் பலகையினை மாற்றி திறப்பு விழாவினை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply