• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரயில்வே திணைக்களத்தை மறுசீரமைப்பதற்கான முன்மொழிவுகள் சமர்ப்பிப்பு

இலங்கை

ரயில்வே திணைக்களத்தை மறுசீரமைப்பதற்கான தொடர் முன்மொழிவுகள் அடுத்த மாதத்திற்குள் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை தற்போது ஆய்வு செய்து வருவதாக அதன் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்க தெரிவித்தார்.

அமைச்சின் அதிகாரிகள் குழுவொன்று பணிகளை மேற்கொள்வதாகவும் அவர்கள் குழுவின் முன்மொழிவுகளை மீளாய்வு செய்து அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கான பிரேரணையை தயாரிப்பதாகவும் செயலாளர் தெரிவித்தார்.

அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமைவாக தாம் செயற்படுவதாகவும் ரயில்வே துறையை சிறப்பாக செயல்படுத்தவும் இழப்பை குறைக்கவும் மறுசீரமைப்பு திட்டம் செயல்படுத்தப்படும். என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply