• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரித்தானியாவில் வெளிநாட்டு இளைஞருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

சினிமா

பிரித்தானியாவில் சாரதிகளுக்கான தேர்வில் வெற்றிபெற்ற சில மணி நேரத்தில், இளைஞர் ஒருவர் முதியவர் மீது வாகனத்தால் மோதிய சம்பவத்தில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 26ம் திகதி குறித்த சாலை விபத்து நடந்துள்ளது. 27 வயதான ஷரோன் ஆபிரகாம் Eastbourne பகுதியில் சாலையை கடக்கும் 75 வயது Andrew Forrest மீது மோதிவிட்டு, சம்பவயிடத்தில் இருந்து மாயமாகியுள்ளார்.
  
மாணவரான ஷரோன் ஆபிரகாம் ஒரு நொடி வாகனத்தை நிறுத்தி நடந்தது என்ன என பார்த்துவிட்டு, அங்கிருந்து மாயமானதாக கூறப்படுகிறது. மட்டுமின்றி, தமது செயல் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் அளிக்கவும் அவர் முயற்சிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

வாகனம் மோதியதியதில் மோசமாக காயமடைந்த Andrew Forrest சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். சம்பவம் நடந்த 16 மணி நேரத்தில் பொலிசார் ஆபிரகாமை கைது செய்துள்ளனர்.

முதியவர் மீது மோதி மரணத்தை ஏற்படுத்திய விவகாரத்தில் அவர் குற்றவாளி என நீதிமன்றத்தில் நிரூபணமான நிலையில் வியாழன் அன்று Lewes Crown நீதிமன்றத்தால் ஆறு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.

அத்துடன் பிரித்தானியாவில் 8 ஆண்டுகளுக்கு அவர் வாகனம் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, மீண்டும் அவர் வாகன சாரதிகளுக்கான சோதனையில் வெற்றி பெற்றால் மட்டுமே உரிமம் வழங்கப்படும்.

ஆபிரகாமுக்கு வெளிநாட்டில் 9 ஆண்டுகள் வாகன சாரதியாக அனுபவம் இருந்தாலும், பிரித்தானியாவிலும் சாரதிகளுக்கான தேர்வில் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகும். ஆனால் தேர்வில் வெற்றிபெற்ற அன்றே ஆபிரகாம் சாலை விபத்தை ஏற்படுத்தியுள்ளார் என்றே தெரிய வந்துள்ளது.

மட்டுமின்றி, விபத்தின் போது அவரது வாகனத்தில் பயணிகளும் இருந்துள்ளனர். விசாரணையின் போது, முறையாகவே வாகனம் செலுத்தியதாகவும், அதிக வேகத்தில் செல்லவில்லை என்றும், விபத்து ஏற்பட்டதில் தமக்கு பங்கில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும், பொலிசாரிடம் சரணடைய வேண்டும் என்றே தாம் கருதியதாகவும் ஆபிரகாம் தெரிவித்துள்ளார். ஆனால் வெளிநாட்டவர் சாலை விபத்தை ஏற்படுத்தினால் என்ன ஆகும் என்பது குறித்து அவர் இணையத்தில் தேடியதும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது. 
 

Leave a Reply