|
நைவேத்தியம்
ஒரு பாத்திரத்தில் பாலை எடுத்து, வீட்டிலுள்ள பிரதான சுவாமிக்கும், பிற தெய்வங்களுக்கும் அதையே உபயோகித்து, நைவேத்தியம் செய்யலாம். தவறில்லை. கோவிலிலும் கூட அதேபோல் செ ய்யலாம். ஆனால், சுவாமிக்கு வேறு, அம்பாளுக்கு வேறு என இரண்டாகப் பிரித்துச் செய்ய வேண்டும். சிவனுக்கு ஆன பிறகு, எல்லா சுவாமிகளுக்கும் செய்யலாம். விஷ்ணு பகவானுக்கும்கூட இதேபோலவே செய்யலாம். மூலஸ்தானங்களில் உள்ள தெய்வங்களுக்கும் பரிவார தேவதைகளுக் கும் ஒரே சமயத்தில் செ ய்யலாம். ஆனால் காய்ச்சிய பாலை அபிஷேகத்திற்கு உபயோகப்படுத்தக் கூடாது. நைவேத்தியத்திற்கு மட்டுமே உபயோகப் படுத்தவேண்டும்.
பூணூல்
பிரம்மச்சாரிகளுக்கு ஒரு பூணூல், கிரஹஸ்தர் களுக்கு இரண்டு பூணூல், விசேஷ காரியங்களில் மூன்றாவதாக உத்திரியம் அணிந்துகொண்டு செய்யவேண்டும். அதற்குப் பதில், மூன்றாவது பூணூலை அணிந்துகொண்டு செய்வது விசே ஷமா னது. அதுவும் கிரஹஸ்தர்கள் ஆன உடனேயே செய்வது அவசியமல்ல.
ஔபாசனம், சிரார்த்தம் போன்ற விசேஷ காரியங்களில் கட்டாயம் மூன்று பூணூலுடன் இருப்பது சிறப்பானது.
சுவாமிப் பட நாட்காட்டிகள் (காலண்டர்)
சுவாமி படம் போட்ட நாட்காட்டிகள், படங்கள் வீட்டில் அதிகமாக நி றைந்துவிடும். நல்ல நாட் காட்டிகளாக இருந்தால் அப்படியே வைத்துக் கொள்ளலாம். தூசு படிந்து கிழிந்திருந்தால் கடலில் போட்டுவிடவும்.
அதேபோலவே, அர்ச்சனை செய்யும் திருநீறு, குங்குமம் என்பன அதிகமாக வீட்டில் சேர்ந்துவிட்டால், அர்ச்சனை செய்யும் குங்குமத்தை நாமே உபயோகப்படுத்திக்கொள்ளலாம். மற்றவர்களுக் கும் உபயோகப்படுத்தக் கொடுக்கலாம். பூஜைய றையில் லட்சுமி படம், குபேரன் படம் என்பன மட் டுமன்றி, அனைத்துத் திருவுருவப் படங்களையும் கிழக்கு முகமாக வைத்து வணங்கலாம். ஏனைய திசை களிலும் வைக்கலாம் என்றாலும் தெற்கு முக மாக மட்டும் நாம் சுவாமி கும்பிடக்கூடாது.
வீட்டுப் பூஜையறையில் சுமார் இருபத்தைந்திற்கும் மேற்பட்ட தெய்வத் திருவுருவப் படங்கள் இருக்கக்கூடும். அதுபோல் சக்கரங்களும் இயந்திரங்களும் கூட இருக்கக்கூடும்.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில், இஷ்ட தெய்வத்தின் படங்களையும் குல தெய்வத்தின் படங்களை யும் வைத்துக்கொள்ளலாம். மீதியான எல்லாவற் றையும் வைத்துக் கொள்வது சிரமமாக இருந்தால் ச முத்திரத்தில் போட்டுவிடலாம். அல்லது ஆற்றில் போட்டுவிடலாம்.
ராகு காலத்தில், குறிப்பாக ஞாயிற்றுக் கிழமைக ளில் துர்க்கை அம்மனுக்கு விளக்கு ஏற்றி ஸ்லோ கங்கள் சொல்வது, அர்ச்சனைகள் செய்வது போன் றவற்றை கோவில்களில் செய்யலாம். வீட்டில் செய்யக்கூடாது.
வீட்டில் இருந்த சாளக்கிராமம் காணாமல் போய்விட்டது, சில அசம்பாவிதங்களும் நடந்து விட்டன என்றால், சீக்கிரமாக இன்னொரு நல்ல சாளக்கிராமம் வாங்கி, வீட்டில் வைத்துப் பூஜை செய்து வணங்கவும். காசியிலும், இராமேஸ்வரத் திலும், நேபாளத்திலும் நல்ல சாளக்கிராமம் கிடைக்கும்.
அனேகர் வீட்டில் துளசிச் செ டியை வைத்து வணங்குவதற்கு இடம் இருக்காது. துளசிச் செ டி வைப்பதானால், வீட்டின் பின்புறம் வைத்து வணங் குவது மிகவும் நல்லது. வீட்டிற்குப் பின்புறமான வடக்கிலும் கிழக்கிலும் வீட்டின் தளத்தைவிட உய ரமாகத் திண்ணை அமைத்து, துளசி மாடம் வைத் தல் கூடாது. தளத்தைவிடப் பள்ளமாக துளசி மாடம் இருக்கலாம். வீட்டிற்குப் பின்புறம் தெற்கி லும் மேற்கிலும் வீட்டுத்தளத்தை விடவும் உயர மாக துளசி மாடத்தை அமைக்கலாம். இது வாஸ்து அமைப்பு.
- வாஸ்து ஜீ
|