• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி லூர்துமலர் பாலசிங்கம்

மலர்வு 28 DEC 1943 / உதிர்வு 24 MAR 2024

யாழ். ஊர்காவற்றுறை முகாம் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aulnay-sous-Bois ஐ வதிவிடமாகவும் கொண்ட லூர்துமலர் பாலசிங்கம் அவர்கள் 24-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சலமோன் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சூசை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அன்ரனி பாலசிங்கம்(S.A.B உரிமையாளர் ஊர்காவற்றுறை) அவர்களின் பாசமிகு மனைவியும்,

சுனிற்ரா(பிரித்தானியா), சுவர்னா(பிரான்ஸ்), சுலக்‌ஷனா(சுவிஸ்), சுதர்சினி(நெதர்லாந்து), அன்ரனி கிளேற்றஸ்(நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பெக்மன், றஞ்சன், சதீஸ்குமார், றெஜிகிளஸ்ரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

டெல்றின், டெனிசன், பிறிற்ரி, ஜொனாத்தன், பிறிந்தா, சர்மி, சஞ்சை ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சிறப்பீன் அம்மா, காலஞ்சென்றவர்களான சிசீலியம்மா, சந்தியாப்பிள்ளை, சேவியர், இருதயராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நல்லம்மா, சந்தியாப்பிள்ளை, அருட்திரு லீனஸ் மரியநாயகம், செபமாலைமுத்து ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

காவலூரில் பிறந்து
கண்ணியமாய் வாழ்ந்தவளே
அன்னை அவள் லூர்துமலரே
மணந்தாய் பாலசிங்கத்தை
மகத்தான ஐந்து மகப்பேறு
 மகிழ்வாய் வாழ்ந்து கண்டாய்
மலர்ச்சியுடன் மணந்திட வழியமைத்தாய்
புடைசூழ பேரன் பேத்திகளுடன்
 மழலை மொழி கேட்டு நித்தமும்
கொஞ்சி குலாவி
கொஞ்சும் கிளிபோல
கனிவுடன் பேசி வளர்த்தவளே
பாசம் என்னும் வார்த்தையில்
பராபட்சம் இல்லாமல்
நேசம் கொண்டவளே
கருணையின் உருவே
 எம் நெஞ்சம் உம்மை மறக்குமா?
 அம்மா!!!

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Tuesday, 26 Mar 2024 3:00 PM - 4:00 PM
    Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு
Get Direction

    Wednesday, 27 Mar 2024 3:00 PM - 4:00 PM
    Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
சுனிற்ரா - மகள்

    Mobile : +447511079221

சுவர்னா - மகள்

    Mobile : +33652317959

ஜமுனா - மகள்

    Mobile : +41765630869

ஜான்சன் - மகன்

    Mobile : +31681213302

சுதர்சினி - மகள்

    Mobile : +31645296975

றஞ்சன் - மருமகன்

    Mobile : +33652078777

Leave a Reply