• Welcome to TamilsGuide
செய்திகள் 1

குற்றச்செயல்களிலிருந்து நாட்டை மீட்டெடுக்க பொலிஸாருக்கு முழு அதிகாரம் என்கிறார் டிரான் அலஸ்

இலங்கை

இந்த நாட்டில் போதைப்பொருள் பாவனையையும், பாதாள குழுக்களின் செயற்பாட்டுக்களையும் இல்லாதொழிக்க எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு தான் பொலிஸாருக்கு உத்தவிட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போது இதனை தெரிவித்த அவர்,

“இடம்பெறுகிற குற்றச் சம்பவங்களை தெரியப்படுத்த நாம் தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

அவ்வாறு பொதுமக்கள் அறியப்படுத்தும்போது நாம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

அதேபோன்று உங்கள் பிரதேசங்களில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் இருந்தாலும் அதுகுறித்து எமக்கு தெரியப்படுத்துங்கள்.

அத்துடன், போதைக்கு அடிமையாகி பாதிக்கப்பட்டவர்களை புனர்வாழ் நிலையங்களுக்கு அனுப்பிவைத்து அவர்களை நாம் மீட்டெடுப்போம்.

நான் யுக்திய நடவடிக்கையை ஆரம்பித்தமைக்கான காரணம் குடு போதைப்பொருளை பாவிப்பவர்களை விரட்டுவதற்காக அல்ல. விற்பவர்களை முழுமையாக இல்லமலாக்குவதற்கான முயற்சியே இது.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால், போதைப்பொருளிலிருந்து எமது கிராம், நகரம் மற்றும் நாட்டை வெகு விரைவில் மீட்டெக்க முடியும். ஆகவே எங்களுடன் ஒன்றிணையுங்கள்.

இந்த விடயத்தில் எவ்வாறான அச்சறுத்தல்கள் வந்தாலும், தவறு நடக்கக்கூடாது என நான் பொலிஸ்மா அதிபருக்கும் பொலிஸாருக்கும் நான் உறுதியாக கூறியுள்ளேன்.

ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்கவும், இந்த விடயத்தில் எனக்கு முழுமையான அதிகாரத்தை வழங்கியுள்ளார்.
யுக்திய நடவடிக்கைக்குள் ஜனாதிபதி ஒருபோது தலையிட்டது கிடையாது.

ஏனெனில் போதைப் பாவனையிலிருந்தும், பாதாளகுழுக்களிடமிருந்தும் நாட்டை காப்பாற்ற வேண்டிய தேவை ஜனாதிக்கும் உள்ளது.

போதையிலிருந்து நாட்டை ஒழிக்கும் எமது வேலைத்திட்டத்தில், கைதுசெய்யப்பட்டவர்கள் வெளியிவிடுமாறு அநேகமான தொலைபேசி அழைப்புக்கள் வருவதாக பொலிஸா மா அதிபர் கூறினார்.

நான் இந்த அமைச்சுப் பதவியில் இருக்கும் வரை அதற்கு இடமளிக்க முடியாது.

பொதுமக்கள் நேர்மையாகயிருந்து எம்முடன் இணைந்தால் மாத்திரமே நம் நாட்டை, போதைப்பாவனையிலிருந்து மீட்டெடுக்க முடியும்” என அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply