• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாடாளுமன்றத்தை கலைக்க இரு தரப்பினரும் இணக்கம் -உதயங்க வீரதுங்க

இலங்கை

முக்கியமான சட்டங்களை இயற்றியதன் பின்னர் நாடாளுமன்றத்தை கலைக்க இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர் எனவும், எதிர்வரும் ஜூன் மாதம் 14 ஆம் திகதிக்குள் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்றும் என மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய உறவினரும், ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அந்தவகையில் எதிர்வரும் ஜூன் 14 ஆம் திகதி அல்லது அதற்கு முற்பட்ட தினத்துக்குள் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்றும் அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்று குறிப்பிடப்படுகின்றது.

மேலும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுபவர் இந்த நாடாளுமன்றத்தை நிச்சயம் கலைப்பார் எனவும் புதிய ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தை கலைப்பதில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
 

Leave a Reply