• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நெற்செய்கை-விவசாய அமைச்சு

இலங்கை

இவ்வருடம் 15 மாவட்டங்களில் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நெல் வயல்களில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி ஹம்பாந்தோட்டை, மொனராகலை, அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அனுராதபுரம், குருநாகல், புத்தளம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி, நுரவஎலியா, மாத்தளை, திருகோணமலை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் இம்முறை நெற்செய்கைக்கு ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட உள்ளன.

தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள விவசாயிகளின் பொது சேவை நிலையங்களுக்கு தலா ஒரு ஆளில்லா விமானத்தை வழங்க விவசாய தொழில்நுட்ப சபை ஏற்பாடு செய்துள்ளதாக அதன் தலைவர் காவிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply