• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு-தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்

இலங்கை

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி நேற்று மாலை 4.00 மணி முதல் இன்று மாலை 4.00 மணி வரையிலான காலப்பகுதிக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பதுளை, கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply