• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சபுகஸ்கந்த விவகாரம் - 650 இக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்

இலங்கை

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனமாக மாற்றியமைப்பதால் 650 இக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை திருகோணமலைக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. சுத்திகரிப்பு நிலையத்தின் பழைய உள்கட்டமைப்பை நவீனப்படுத்தவும் மேம்படுத்தவும் தற்போதுள்ள முதலீட்டுத் தேவையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறைந்தபட்சம் இன்னும் 25 ஆண்டுகளுக்கு சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாட்டு திறன் மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனால், இங்கு பணியாற்றும் 650 இக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் தற்போதுள்ள ஊழியர்களில் சுமார் 200 பேரை அரசு நிறுவனங்களுக்கு பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply