• Welcome to TamilsGuide
செய்திகள் 1

குழந்தைகளுடன் அன்னையர் தினத்தை கொண்டாடிய நயன்தாரா

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவர் நயன்தாரா அவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இவர் தமிழ் இயக்குனரான விக்னேஷ் சிவனை ஜூன் 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு அழகான இரு ஆண் குழந்தைகள் அக்டோபர் 2022 ஆம் ஆண்டு பிறந்தன. அவர்களுக்கு உயிர் மற்றும் உலக் என பெயரிட்டனர். அவ்வப்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளங்களில் அவர்களின் திரை துறை வாழ்க்கையை பற்றியும் தனிப்பட்ட வாழ்க்கையில் நடைப்பெறும் நிகழ்வை பற்றியும் புகைப்படங்களை பகிர்ந்து வருவர்.

அதுப்போல் இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவன் வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் நயன்தாரா அவரது மகன்களான உயிர் மற்றும் உலகுடன் குழந்தையோடு குழந்தையாய் விளையாடிக்கொண்டு இருக்கிறார். குழந்தையை தோள் மேல் தூக்கி வைத்து விளையாடுவது, மகனை முத்தமிடுவது, கொஞ்சுவது, சிரிப்பது, கைப் பிடித்து நடப்பது என அந்த வீடியோவில் காட்சிகள் அமைந்துள்ளன.

இந்த வீடியோவை பார்க்கவே மிகவும் கியூட்டாக உள்ளது. இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நீதான் என்னுடைய உயிர் மற்றும் உலகம் என அந்த வீடியோவில் நயன்தாராவை குறித்து பதிவிட்டுள்ளார்.
 

Leave a Reply