• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விஜித் குணசேகரவை 20 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

இலங்கை

சர்ச்சைக்குரிய ஹியூமன் இம்மியூனோகுளோபியூலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த விவகாரம் தொடர்பாக தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர, நேற்று முன்தினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.

இதன்போது, ஹியூமன் இம்மியூனோகுளோபியூலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பாக அவர் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்ல உள்ளிட்ட அதிகாரிகளும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply