• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நீங்கள் இதைப் பார்க்கிறீர்கள் என்றால் நான் இறந்திருப்பேன்! புற்றுநோயால் உயிரிழந்த கனேடிய டிக்டோக் பிரபலம்

கனடா

கனடாவில் தனது மரணத்தை அறிவித்து டிக்டோக் பிரபலம் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. 

டிக்டோக்கில் பிரபலமான கிம்பர்லி நிக்ஸ் (28), செல் புற்றுநோயால் மூன்று ஆண்டுகளாக போராடி வந்தார்.

அவர் தனது உடல்நலக் குறைபாடுகள் குறித்து மக்களிடம் பேசினார். இதனால் அவரை பின்தொடர்ந்த 137,000 பேர் நிக்ஸின் நிலையால் வேதனையடைந்தனர். 

இந்த நிலையில் நிக்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் தனது மரணத்தை அறிவித்தார். அவரது வீடியோவில்,

''இங்கே பயணம் முடிந்தது. நீங்கள் இந்த கிளிப்பைப் பார்க்கிறீர்கள் என்றால், நான் நிம்மதியாக இறந்துவிட்டேன்'' என கூறியிருந்தார்.

முன்னதாக, நிக்ஸ் தனது புற்றுநோயை கண்டறியப்பட்ட பிறகு, இதேபோன்ற சூழ்நிலைகளில் மற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் தனது பயணத்தை ஒன்லைனில் பகிர்ந்து கொள்ள முடிவு செய்திருந்தார். 

அதன்படி கிம்பர்லி நிக்ஸ் தன்னைப் பற்றிய பல விடயங்களை வீடியோ மூலம் பின்தொடர்பாளர்களிடம் பகிர்ந்து வந்தார். 

இந்த நிலையில், கிம்பர்லி நிக்ஸ் (Kimberly Nix) தனது 31வது வயதில் ஆல்பர்ட்டாவில் உள்ள Calgaryயில் உயிரிழந்தார்.

Metastatic புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதே தனது குறிக்கோளாக இருந்தது என்றும், அதில் குழுவாக வெற்றி பெற்றதாகவும், பாரிய உயரத்தை அடைந்ததாகவும் நிக்ஸ் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   
 

Leave a Reply