• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரான்சில் கணவன் கண் முன்னே மனைவிக்கு நேர்ந்த கொடுமை - கோர சம்பவத்தை நினைவுகூரும் மகள் 

இரண்டாம் உலகப்போரின்போது தன் தாய்க்கு நிகழ்ந்த பயங்கரம் ஒன்றை 80 ஆண்டுகளாக மனதில் மறைந்துவைத்திருந்த பிரான்ஸ் நாட்டுப் பெண்ணொருவர், முதன்முறையாக மௌனம் கலைத்துள்ளார்.

பிரான்சிலுள்ள Montours என்னும் கிராமத்தில் தன் பெற்றோருடன் வாழ்ந்துவந்தவர் எய்மி (Aimee Dupre). அது இரண்டாம் உலகப்போர்க்காலம். ஜேர்மனியின் பிடியிலிருந்து பிரான்சை விடுவித்த அமெரிக்க, பிரித்தானிய, கனேடிய மற்றும் பிரான்ஸ் வீரர்களை ஹீரோக்களாகக் கொண்டாடினார்கள் மக்கள்.

ஆனால், அந்த ஹீரோக்களில் சிலரே பிரெஞ்சுப் பெண்கள் பலருக்கு வில்லன்களாகிப் போனார்கள். அப்படி அந்த வீரர்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் ஒன்று எய்மியின் குடும்பம்.

நார்மண்டி என்னுமிடத்தில் முகாமிட்டிருந்த போர்வீரர்களில் சிலர், ஊருக்குள் புகுந்து பெண்களை சீரழிக்கத் துவங்கியுள்ளார்கள். அப்போது எய்மிக்கு வயது 19. 1944ஆம் ஆண்டு, ஆகத்து மாதம் 10ஆம் திகதி, இரண்டு அமெரிக்க வீரர்கள் எய்மியின் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்கள்.

வன்புணரும் நோக்கத்துடன் அவர்கள் எய்மியை தூக்கிச் செல்ல முயல, தடுத்த அவரது தந்தையை நோக்கி துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள் அவர்கள். அப்போது தன் மகளைக் காப்பாற்றுவதற்காக, தன்னைப் பிடித்துச் செல்லுமாறு கேட்டிருக்கிறார் எய்மியின் தாய்.

இரவு முழுவதும் அந்த அமெரிக்கர்கள் எய்மியின் தாயை சீரழிக்க, அவர் உயிருடனாவது திரும்ப வருவாரா என நடுக்கத்துடன் காத்திருந்திருக்கிறது அவரது குடும்பம்.

உண்மையில், அன்று சீரழிக்கப்பட்டது எய்மியின் தாய் மட்டுமல்ல. போர் வீரர்கள் பிரான்சிலிருந்து வெளியேறும் முன், ஆயிரக்கணக்கான பெண்கள் சீரழிக்கப்பட்டிருந்தார்கள். பின்னர், அவர்களை வன்புணர்ந்ததற்காக, அமெரிக்க ராணுவ உயர் அதிகாரிகள் 152 போர் வீரர்களை விசாரணைக்குட்படுத்தியுள்ளார்கள்.

அவமானம் காரணமாக, அவர்களில் பெரும்பாலானோர் நடந்ததை கடைசி வரை வெளியில் சொல்லவேயில்லை. தன் தாய் சீரழிக்கப்பட்ட அன்று, அதுவும் தன் மானத்தைக் காப்பாற்றுவதற்காக தன்னையே தியாகம் செய்ய முன்வந்த தன் தாயின் கதையை இப்போது வெளியே சொல்லியிருக்கிறார் எய்மி. அவருக்கு இப்போது வயது 99.
 

Leave a Reply