• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தியத்தலாவ கார் பந்தய விபத்து - விசாரணைக்கு 7 பேர் அடங்கிய குழு நியமனம்

இலங்கை

தியத்தலாவையில் கார் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்துக் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக  மேஜர் ஜெனரல் தலைமையிலான 7 பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்

தியத்தலாவையில நேற்று முன்தினம் இடம்பெற் பொக்ஸ் ஹில் சுப்பர் க்ரொஸ் 2024 கார் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்ததுடன் 21 பேர் காயமடைந்திருந்தனர்.

காயமடைந்துள்ளவர்களில் 15 பேர் தியத்தலாவை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றவருவதுடன் மேலும் மூவர் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்

இதேவேளை விபத்து தொடர்பாக காணொளி பதிவுகள் மற்றும் நிழற்படங்களின் அடிப்படையில் ஏற்கனவே இராணுவ உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்

இதனிடையே, தியத்தலாவயில் இடம்பெற்ற விபத்து தொடர்பான அறிக்கை எதிர்வரும் 10ஆம் திகதி இராணுவத் தளபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

விபத்து ஏற்பட்டமைக்ககான காரணம் மற்றும் விபத்துக்கு பொறுப்புக்கூறவேண்டியவர்கள் அத்துடன் பார்வையாளர்களின் பாதுகாப்பு ஆகிய விடயங்களை அடிப்படையாக கொண்டு குறித்த குழுவினரால் ஆராயப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது

இதேவேளை விபத்து தொடர்பாக பந்தய கார் சாரதிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இவர்கள் இருவரும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply