• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கடந்த இரண்டு வருடங்களில் இலங்கையை விட்டு வெளியேறிய 25 இலட்சம் பேர் - வெளிவந்த அதிர்ச்சிகர தகவல் 

இலங்கை

இலங்கையில் கடந்த இரண்டு வருடங்களில் இருபத்தைந்து இலட்சத்து அறுபத்து ஐயாயிரத்து முந்நூற்று அறுபத்தைந்து பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார் மற்றும் கடந்த ஆண்டு பதினான்கு இலட்சத்து முப்பத்தேழாயிரத்து அறுநூற்று ஏழு பேர் வெளிநாடு சென்றுள்ளனர்.

இவர்களில் வெளிநாட்டு வேலைக்காகச் சென்றவர்களின் எண்ணிக்கை ஆறு இலட்சத்து எட்டாயிரத்து தொள்ளாயிரத்து இருபத்தைந்து பேர். இது வெளிநாடு சென்ற மொத்த எண்ணிக்கையில் 24 சதவீதம் ஆகும்.

கடந்த 2022 ஆம் ஆண்டு முந்நூற்று பதினோராயிரத்து இருநூற்று அறுபத்தி ஒன்பது பேரும் கடந்த ஆண்டில் இரண்டு இலட்சத்து தொண்ணூற்று ஏழாயிரத்து அறுநூற்று ஐம்பத்தாறு பேரும் வெளிநாட்டு வேலைக்காக வெளியேறியுள்ளனர் என்று பேராசிரியர் கூறினார்.

2023ஆம் ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியவர்களில் சுமார் எழுபது வீதமானவர்கள் தொழில்ரீதியாக உயர் தகைமை பெற்ற பொறியியலாளர்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள் போன்றவர்கள் எனத் தெரிவித்த வசந்த அத்துகோரள, கடந்த வருடம் வெளிநாட்டு வேலைகளுக்குச் சென்றவர்களில் 34 வீதமானவர்கள் 25-34 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் குறிப்பிட்டார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளிநாடு சென்றவர்களில் 55 சதவீதம் பேர் ஆண்கள், 45 சதவீதம் பேர் பெண்கள்.

இதேவேளை, கடந்த இரண்டு வருடங்களில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை 18,200,479 ஆகும்.

பொருளாதார நெருக்கடி மற்றும் விரக்தியின் காரணமாக இவர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.
 

Leave a Reply