• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அமெரிக்க குடியுரிமை - 2-வது பெரிய நாடாக இந்தியா

அமெரிக்க நாட்டில் வசிக்க உலகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் விரும்பி வருகிறார்கள்.மேலும் வேலை மற்றும் படிப்புக்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த ஏராளமான மக்கள் அமெரிக்கா சென்று வருகிறார்கள்.

அமெரிக்காவின் வாழ்க்கை ,வசதிகள் பிடித்த காரணத்தால் அந்நாட்டில் வசிப்பதற்கு குடியுரிமை பெற தினந்தோறும் ஏராளமான பேர் விண்ணப்பித்து வருகின்றனர்.

2022 -ம் ஆண்டின் கணக்கெடுப்பு படி 46 மில்லியன் வெளிநாட்டில் பிறந்த மக்கள் அமெரிக்காவில் வசிக்கின்றனர் .இது அமெரிக்க நாட்டின் மொத்த மக்கள் தொகையான 333 மில்லியனில் 14 சதவீதம் ஆகும்.

மெக்ஸிகோவில் பிறந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் தற்போது அமெரிக்காவில் வசிக்கின்றனர். அதைத் தொடர்ந்து இந்தியா, பிலிப்பைன்ஸ், கியூபா மற்றும் டொமினிகன் குடியரசு நாடுகளை சேர்ந்தவர்கள் வசிக்கிறார்கள் என சமீபத்திய கணக்கெடுப்பு ஆய்வு தெரிவித்துள்ளது.

2022 -ல் 128,878 மெக்சிகன் மக்கள் அமெரிக்க குடியுரிமை பெற்றனர். அதை தொடர்ந்து, இந்தியாவை சேர்ந்தவர்கள் 65,960 பேர் குடியுரிமை பெற்றுள்ளனர். பிலிப்பைன்ஸ் 53,413, கியூபா 46,913, டொமினிகன் குடியரசு 34,525, வியட்நாம் 33,246 பேர் குடியுரிமை பெற்றனர்.

இந்நிலையில் தற்போது 65,960 இந்தியர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர். மெக்சிகோவிற்கு அடுத்தபடியாக அமெரிக்க குடியுரிமை பெற்ற 2- வது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது

Leave a Reply