• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இரண்டு உலகப் போர்களிலும் தப்பிய ரஷ்ய கப்பல் - சோலியை முடித்த உக்ரைன் ஏவுகணை 

விளாடிமிர் புடினின் 112 ஆண்டுகள் பழமையான போர் கப்பலை உக்ரைன் ஏவுகணையால் சிதைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டு உலகப் போர்களிலும் தப்பிய அந்த போர் கப்பலானது, ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட Sevastopol துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், உக்ரைன் ஏவுகணையால் தாக்கியுள்ளது.

வெளியான காணொளியில், கரும் புகையுடன் நெருப்பும் காணப்படுவதாக கூறுகின்றனர். குறித்த கப்பலானது ரஷ்ய உள்நாட்டுக் கலகம், இரண்டு உலகப் போர்கள் மற்றும் உக்ரைன் போரிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

ஏவுகணை தாக்குதல் தகவலை அடுத்து அந்த 315 அடி நீளமுள்ள கப்பலில் தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் துறைமுகத்திற்கு விரைந்ததாக கூறப்படுகிறது.

Kommuna என்ற இந்த கப்பலானது 1913 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரஷ்ய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப் பழமையான கடற்படைக் கப்பல் இது என்பதுடன் புட்டினின் கருங்கடல் கடற்படையின் மதிப்புமிக்க உறுப்பினர் என்றும் கூறுகின்றனர்.

ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியத்தின் ரஷ்ய கவர்னரான Mikhail Razvozhayev தற்போது தாக்குதலை உறுதி செய்துள்ளதுடன், ரஷ்யாவுக்கு இது பெரும் பின்னடைவு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய கருங்கடல் கப்பல்கள் மீதான உக்ரேனிய தாக்குதல்கள் சமீபத்திய மாதங்களில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளன. குறித்த தாக்குதலை உக்ரைன் கடற்படையும் உறுதி செய்துள்ளது .
 

Leave a Reply