• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிரியாவின் வான் பாதுகாப்பு சிஸ்டத்தை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்

காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரான் ஆதரவு பெற்ற குழுக்கள் லெபனான், சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.

கடந்த 1-ந்தேதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் சேதம் அடைந்தது. இரண்டு முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என சூளுரைத்த ஈரான், கடந்த ஞாயிற்றுக்கிழமை டிரோன்கள், ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் நோக்கி தாக்குதல் நடத்தியது. ஆனால் அமெரிக்கா உதவியுடன் இஸ்ரேல் அனைத்து தாக்குதலையும் முறியடித்தது.

இதனால் மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் அதிகரித்தது. இஸ்ரேல் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என்று பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தெரிவித்திருந்தன.

இந்த நிலையில் சிரியாவில் உள்ள வான்பாதுகாப்பு சிஸ்டத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில் சேதம் அடைந்ததாக சிரியாவின் உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக ஈரானின் முக்கியமான விமானப்படை தளம் மற்றும் அணுசக்தி தளம் அருகே அதிக சத்தத்துடன் போர் விமானங்கள் அதிக சத்தத்துடன் காணப்பட்டதாகவும், டிரோன்கள் பறந்ததாகவும் தகவல் வெளியானது.

இஸ்ரேல் தாக்குதல் நடத்திய இடம் கிழக்கு ஈரானில் இருந்து சிரியாவிற்கு வடக்குப் பகுதியில் 1500 கி.மீட்டர் தொலைவில் இருக்கும் இஸ்பஹான் இடமாகும்.

வெள்ளிக்கிழமை காலையில் ஈரான் வான் பாதுகாப்பு பேட்டரிகளை ஏவியது. போர் விமானங்கள் பறந்தது எனக் கூறப்பட்டதால் சில விமானங்கள் திருப்பி விடப்பட்டன. சில விமானங்கள் தரையிறக்கப்பட்டன.

இந்த பதற்றமான சூழ்நிலை குறித்து அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் கருத்து கூற மறுத்துவிட்டார்.
 

Leave a Reply