• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் செயற்பாடு குறித்து தயாசிறி கவலை

இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றும் அரசாங்கத்தின் சதித்திட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமைத்துவம் வழங்குகின்றமை கவலையளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகசந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  கட்சியின் பதவி நிலைகளில் இருந்து விலகியுள்ள போதிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொறுப்புக்களை நான் ஒருபோதும் கைவிடமாட்டேன்.

நான் ஆளுந்தரப்பினருடனோ அல்லது எதிர்த்தரப்பினருடனோ இதுவரை இணையவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பின்னடைவுக்கு பல காரணிகள் உள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி என்ற ரீதியில் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாம் ஒரு தீர்மானத்தை மேற்கொண்டோம்.

அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கும் அமைச்சு பதவிகளில் இருந்து வெளியேறுவதற்கும் தீர்மானித்தோம். சர்வகட்சி அரசாங்கம் நாட்டிற்கு தேவையாகவுள்ளதென கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன பல தடவைகள் வலியுறுத்தியிருந்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றும் அரசாங்கத்தின் செயற்பாடே தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை கட்டியெழுப்புவதற்கும் கட்சியின் வளர்ச்சிக்கும் ஒத்தழைப்பு வழங்கிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க போன்றவர்கள் இவ்வாறன சதித்தித்திட்டங்களுக்கு தலைமைத்துவம் வழங்குகின்றமை மிகவும் கவலைக்குரியது.

எதிர்வரும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அதிகாரத்தை இல்லாமலாக்கும் முயற்சியின் ஒரு அங்கமாகவே இது அமைகின்றது” இவ்வாறு தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply