• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஐரோப்பிய நாடு

இஸ்ரேலுடனான திடீர் போர் வெடிக்கும் அபாயம் இருப்பதால் ஈரானில் இருந்து உடனடியாக வெளியேற தங்கள் நாட்டு மக்களை ஜேர்மனி வலியுறுத்தியுள்ளது. இந்த நெருக்கடியான சூழலில் ஈரானில் தங்கியிருப்பது சிக்கலை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளது. குறிப்பாக இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே தற்போது நிலவும் பதற்றம் திடீரென அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்றும் ஜேர்மனி வெளிவிவகார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
  
மேலும், விமானம், சாலை மற்றும் கடல் போக்குவரத்துப் பாதைகள் பாதிக்கப்படலாம் என்பதையும் நிராகரிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது. அத்துடன், ஜேர்மன் குடிமக்கள் தன்னிச்சையாக கைது செய்யப்பட்டு விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டு நீண்ட சிறைத்தண்டனை விதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஈரானிய மற்றும் ஜேர்மன் இரட்டைக் குடியுரிமை கொண்ட குடிமக்கள் குறிப்பாக ஆபத்தில் உள்ளனர் என்றும் ஜேர்மன் வெளிவிவகாரத்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக இந்திய குடிமக்கள் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மறு உத்தரவு வெளியாகும் வரையில் பயணங்களை தவிர்க்கவும் வலியுறுத்தியுள்ளனர். சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரான் துணைத் தூதரகம் மீது ஏப்ரல் 1ஆம் திகதி இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை முன்னெடுத்தது.

குறித்த தாக்குதலில் ஈரானின் உயர்மட்ட ராணுவ ஜெனரல் மற்றும் ஆறு ஈரான் ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பழிக்குப் பழி வாங்கப்படும் என்றே ஈரான் கூறி வருகிறது. 
 

Leave a Reply