• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தல் - ஜப்பானிலிருந்து வெளியான அறிவிப்பு 

இலங்கை

இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தல்கள் தொடர்பில்  ஜப்பான் நாடாளுமன்ற குழு உறுப்பினர் யமகுச்சி சுசுமு கருத்து தெரிவித்துள்ளார்.

அந்தத் தேர்தல்களில் சரியான திட்டமும் கொள்கையும் கொண்ட ஒரு குழுவைத் தெரிவு செய்வதற்கு இலங்கை வாக்காளர்கள் செயற்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

அத்துடன் எதிர்காலத்தில் ஜப்பானில் இலங்கையர்களுக்கு பல தொழில் வாய்ப்புகளை வழங்க தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஜப்பானில் மாநகரசபை தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தாம் உள்ளிட்ட குழுவினர் இலங்கை தொடர்பில் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

ஜப்பானிய இலங்கை வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜகத் ராமநாயக்க உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
 

Leave a Reply