• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிளிநொச்சியில் சடுதியாகக் குறைவடைந்த காய்கறிகளின் விலை

இலங்கை

கிளிநொச்சி மாவட்டத்தில் காய்கறிகளின் விலை சடுதியாகக் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஒரு கிலோகிராம் கத்தரிக்காய்- 150 ரூபாய் வரையிலும், பயற்றை- 100 ரூபாய் வரையிலும், பூசணி- 100 ரூபாய் வரையிலும்  ஏனைய காய்கறிகள் 150 ரூபாய் தொடக்கம் 200 ரூபாய் வரையிலும்  விற்பனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை காய்கறிகளின் விலையில் மாற்றம் ஏற்பட்டிருந்த போதிலும் கிருமி நாசினிகள், நாளாந்த கூலி, பசளை உள்ளிட்டவற்றில் மாற்றம் ஏற்படவில்லை எனவும் இதன் காரணமாக தோட்டச் செய்கையில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply