• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எந்த தேர்தலை முதலில் நடத்துவது என ரணிலே தீர்மானிக்கலாம் – பசில்

இலங்கை

எந்த தேர்தலை முதலில் நடத்துவது என ஜனாதிபதியே தீர்மானிக்கலாம் எனவும், அதற்கு பொதுஜனபெரமுன இடமளிக்கும் எனவும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலை முதலில் நடத்தவேண்டும் என்ற தமது நிலைப்பாட்டை நாம் அவருக்கு தெளிவுபடுத்தியுள்ளோம். அத்துடன் அது முடிவடைந்துவிட்டது. இனி அவரே தீர்மானிக்கலாம் என பசில் ராஜபக்ச தனியார் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

பசில் ராஜபக்ஷவுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இயையே அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளையடுத்து, பசில் ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார்.

எங்கள் கட்சி எந்த வகையிலும் ஜனாதிபதிக்கு அழுத்தங்களை கொடுக்காது எனவும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்தலை முதலில் நடத்தவேண்டும் என்ற தனது தனிப்பட்ட கோரிக்கைக்கு அப்பால், எந்த தேர்தலை முதலில் நடத்தவேண்டும் என்பது குறித்து வேறு எந்த பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முடிவு என்பது முற்றிலும் ஜனாதிபதியின் கரங்களிலேயே உள்ளது எனவும் முன்னாள் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இரண்டு தேசிய தேர்தல்களையும் எதிர்கொள்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தயாராகி வருவதாகவும், எதிர்வரும் 9 ஆம் திகதி கட்சியின் மத்திய நிறைவேற்றுக்குழுவின் கூட்டம் இடம் பெறவுள்ளதாகவும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த கூட்டத்தில் தேர்தல்கள் குறித்து ஆராயப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply